மாவட்ட செய்திகள்

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் + "||" + The student must withdraw the case against Sophia

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்

மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்
மாணவி சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை, 


மதுரை தெற்கு மாவட்ட த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் மகபூப் பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேக் இப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாஜ்தீன் வரவேற்றார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நூரூல்ஹக், மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, துணை பொதுச் செயலாளர் முகமது கவுல், தலைமை கழக பேச்சாளர் பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், அக்டோபர் 7-ந்தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடக்கும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மே 17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்ட தடுப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா மீது போடப்பட்ட வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும். அவரை அச்சுறுத்தி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். மதுரை முனிச்சாலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், வழிபாட்டு தலங்கள் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேக் நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருத்துறைப்பூண்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 விவசாயிகள் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அதிகாரி வழக்கு
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரின் பேரில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.
3. ஈரோட்டில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மீது 4 வழக்குகள் பதிவு
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது ஈரோட்டில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
4. நடுவானில் பயணிகள் பாதிப்பு: விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
நடுவானில் பயணிகள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் போலீசில் புகார் மனு அளித்தார்.
5. நண்பரை கொன்று உடலை குமரியில் வீசிய வழக்கு: தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் கைது
நண்பரை கொன்று உடலை குமரியில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.