மாவட்ட செய்திகள்

வானவில் : டோஸ்டராய்ட் + "||" + Vanavil : Tostarayt

வானவில் : டோஸ்டராய்ட்

வானவில் : டோஸ்டராய்ட்
காபியில் முகம் வரைந்து கொடுக்கும் டெக்னாலஜி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இன்றைய அவசரயுகத்தில் பெரும்பாலானவர்களின் காலை உணவாக மாறிவிட்ட பிரெட்டிலும் நமக்கு விரும்பிய எழுத்துக்களையோ, படங்களையோ அச்சிட்டு டோஸ்ட் செய்து தருகிறது இந்த டோஸ்டராய்ட் (Toasteriod ) கருவி. ஆப் மூலம் இயங்கக்கூடிய இதைக் கொண்டு அழகான படங்களை வரைந்தோ அல்லது வாசகங்களை அச்சிட்டோ பொன்னிறமாக டோஸ்ட் செய்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட பிரெட்டில் இருக்கும் உருவங்களையும், படங்களையும் பார்த்து சாப்பிடுவதில் ஆர்வம் கொள்ளவைக்கும். நன்றி, பிறந்தநாள் வாழ்த்து போன்ற செய்திகளை, நாம் வெளியூரில் இருந்தாலும் இந்த டோஸ்டருக்கு மொபைல் ஆப் மூலம் அனுப்பி நம் அன்பானவர்களின் காலை உணவை ஸ்பெஷல் ஆக்க முடியும். யார் அனுப்பியது என்ற விவரத்துடன் கூடிய செய்தி நமது செல்போனுக்கு வந்துவிடும்.

அன்றைய வானிலையை கூட நமது பிரெட்டில் டோஸ்ட் செய்து தெரிந்து கொள்ளலாம். ‘மைக்ரோ பிலமென்ட் டெக்னாலஜி’ மூலம் இது செயல்படுகிறது. வேண்டிய பட்டனை அழுத்தி பிரெட் துண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன்களில் இருந்து தேர்ந்தெடுத்து டோஸ்ட் செய்து கொள்ளலாம். அல்லது ஆப் மூலம் நாம் விரும்பிய படங்களின் வாழ்த்து செய்திகளை சேர்த்து பிரெட்டில் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

சாதாரண காலை உணவைக்கூட ரசனையோடு வழங்கிட வகை செய்கிறது இந்த டோஸ்டராய்ட். 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : இந்தியாவில் ஆலை அமைக்கும் ‘பெனலி’ நிறுவனம்
இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘பெனலி’ (Benelli). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கியமானவை சூப்பர் பைக்குகள்.
2. வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்
சச்சின் தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் கார்களின் ரசிகர்.
3. வானவில் : ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்
மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கார்களை வகைப்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று தான் ‘யுடிலிடி வெகிக்கிள்’. சுருக்கமாக இதை ‘யு.வி. கார்கள்’ என்கிறார்கள்.
4. வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் சாகசம் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கான புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
5. வானவில் : மஹிந்திராவின் புதிய அறிமுகம் ‘மராஸோ’
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ‘மராஸோ’ என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.