மாவட்ட செய்திகள்

வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள் + "||" + Vanavil : Suzuki sports bikes that attract adventure lovers

வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்

வானவில் : சாகசப்பிரியர்களை கவரும் சுஸுகி ஸ்போர்ட்ஸ் பைக்குகள்
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சுஸுகி நிறுவனம் சாகசம் மற்றும் ரேஸ் பிரியர்களுக்கான புதிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
மொத்தம் 4 மாடல்களில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள்களை, வழக்கமான மோட்டார் சைக்கிளைப் போல சாலைகளில் ஓட்ட முடியாது. இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதியும் கிடையாது.

வழக்கமான பைக்குகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இதில் இல்லை. அதாவது, பொது இடங்களில், சாலைகளில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதற்கு என சில விதி முறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளில் தயாரிக்கப்பட்ட வாக னங்களை மட்டுமே பொது இடத்தில் ஓட்ட முடியும்.

ஆனால் இவற்றுக்கு முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகள் கிடையாது. அதேபோல வாகனம் எந்தப் பக்கம் திரும்புகிறது என்பதை உணர்த்தும் ‘இன்டிகேட்டர்’ விளக்கும் கிடையாது. இதனால் இவற்றை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது.

மேலும் வழக்கமான சாலைகளில் ஓட்டுவதற்கேற்ற டயர்களும் இதில் கிடையாது. இதனால் இவற்றை பொழுது போக்கிற்காக அல்லது பந்தயங்களில் மட்டுமே (ரேஸ் மைதானங்களில்) பயன்படுத்த முடியும். மேலும் சேறு, சகதி நிறைந்த பகுதிகளில் ஓட்டலாம்.

மிரட்டலான தோற்றமும், அட்டகாசமான வேகமும் கொண்ட இவை அனைத்துமே இறக்குமதி ரகங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து இங்கு ‘அசெம்பிள்’ செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். இந்த பைக்குகளின் சிறப்பம்சம் குறித்து காண்போம். முதலில் அந்த 4 மாடல்கள் பெயர் விவரம் இதோ...

1) ஆர்.எம். - இசட் 250 (RM-Z 250),

2) ஆர்.எம். - இசட் 450 (RM-Z 450),

3) ஆர்.எம். - எக்ஸ் 450 இசட் (RM- X -450 Z),

4) டி.ஆர் - இசட் 50 (DR-Z 50)

ஆர்.எம். - இசட் 250: சாகசப் பயணத்திற்கான முழுமையான பைக் இதுவே. எடை 106 கிலோ. சீட் 95 செ.மீ. உயரத்தில் இருக்கும். முன்பகுதி மற்றும் பின் பகுதி சஸ்பென்ஷன்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது. 250 சி.சி. திறன் கொண்ட இந்த பைக் நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டது. இதன் விலை சுமார் ரூ. 7.20 லட்சம்.

ஆர்.எம். - இசட் 450: இது 449 சி.சி. திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்ட பைக் ஆகும். இதுவும் சாகசப் பயணத்திற்கான பைக் தான். 125 சி.சி. மொபெட் போன்ற தோற்றத்துடன் 112 கிலோ எடை கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. விலை சுமார் ரூ. 8.40 லட்சம்

ஆர்.எம். - எக்ஸ் 450 இசட்: சுமார் 8.75 லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றது. இதற்கு ஏற்ப இதில் முகப்பு விளக்கு உள்ளது. ஆர்.எம்.-இசட் 450 பைக்கில் உள்ளது போலவே இதல் 449 சி.சி. திறன் கொண்ட நான்கு ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது.

டி.ஆர் - இசட் 50: மினி பைக் ஆன இது சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பும் இளைய தலைமுறையினர் பயிற்சி பெறும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 49 சி.சி. திறன் கொண்ட இந்த மினி பைக்கில் நான்கு ஸ்டிரோக், ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் எடை 54 கிலோ மட்டுமே. சீட் 56 செ.மீ. உயரத்தில் உள்ளது. இதன் விலை ரூ. 2.65 லட்சமாகும்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்துமே மற்றொரு ஜப்பானிய நிறுவனமான கவாஸகியின் கே.எல்.எக்ஸ். வரிசை மோட்டார் சைக்கிளுக்குப் போட்டியாக இருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : உணவு பரிமாறும் ‘பென்னி ரோபோ’
உணவகங்களில் சர்வர் வேலை பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
2. வானவில் : விண்வெளி ஆராய்ச்சிப் பணியில் ரோபோ
செயற்கைக் கோள்களின் மூலம் மற்ற கிரகங்களில் நடப்பவற்றை ஆராய்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
3. வானவில் : டேப்லெட்டாக விரியும் செல்போன்
மடிக் கணினி கேள்விப்பட்டிருப்போம். மடித்து கொள்ளும் ஸ்மார்ட் போனைப் பற்றி அறிவீர்களா?
4. வானவில் : உலகின் மிகச் சிறிய வானியல் கேமரா
பொதுவாக வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களைப் படம் பிடிக்க விசேஷமான கேமராக்கள் அவசியம்.
5. வானவில் : சிறிய சைஸ் புரொஜெக்டர்
என்டெக் நிறுவனம் புதிய வகை பன்முக செயல்பாடுகளைக் கொண்ட சிறிய அளவிலான புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.