மாவட்ட செய்திகள்

காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி + "||" + No MLAs from Congress They will not leave the party

காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி

காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி
காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு, 

காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பது...

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த நாளில் இருந்து இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள். குறிப்பாக கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மற்றும் அவருடன் இருப்பவர்கள் இந்த தகவலை பரப்புகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பது என்பது சாத்தியம் இல்லை.

பெலகாவி மாவட்ட காங்கிரசில் எழுந்துள்ள பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. கூட்டணி ஆட்சியில் எந்த மந்திரிகளும் வேறு மாவட்டங்களின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருக்கிறார். அந்த மாவட்டத்தில் அரசு நிர்வாக விஷயங்கள் அவர் சொல்கிறபடி நடக்கிறது. அதனால் இதில் எந்த குழப்பமும் இல்லை.

பெரிய பிரச்சினை இல்லை

சுதாகர் எம்.எல்.ஏ. தனது தொகுதியில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று வெளிப்படையாக பேசினார். அவருடன் நான் பேசினேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தால், அதை முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறி தீர்த்து வைப்பதாக கூறி இருக்கிறேன்.

ஜார்கிகோளி சகோதரர்களுக்கு இப்போது சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதை நாங்கள் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்வோம். இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள். வேறு கட்சியிலும் சேர மாட்டார்கள். இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை