மாவட்ட செய்திகள்

கொடைக்கானலை சேர்ந்த ஆசிரியைக்கு மத்திய அரசு விருது + "||" + Central Government Award for Kodaikanal Teacher

கொடைக்கானலை சேர்ந்த ஆசிரியைக்கு மத்திய அரசு விருது

கொடைக்கானலை சேர்ந்த
ஆசிரியைக்கு மத்திய அரசு விருது
கொடைக்கானல் பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரமம் பள்ளியை சேர்ந்த ஆங்கில ஆசிரியைக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.
கொடைக்கானல்,

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ஆசிரியர் தினத்தையொட்டி விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 37 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தில் கொடைக்கானலில் உள்ள பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரமம் பள்ளியை சேர்ந்த ஆங்கில ஆசிரியை மீராராமன் ராஜ்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் வகுப்பறையில் புதுமைகள் பல செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி உபேந்திரா குஷ்வாகா விருதினை வழங்கினார்.