மாவட்ட செய்திகள்

ஓசூரில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது + "||" + A woman in Hosur Murdered Arrested the thugs

ஓசூரில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது

ஓசூரில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலன் கைது
ஓசூரில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நவதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நவதி அருகில் ராணியின் முகம், கை, கால்கள் என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராணி கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேல ஆசாரப்பள்ளியை சேர்ந்த விவசாயி தேவராஜ் (60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கைது செய்யப்பட்ட தேவராஜிக்கும், ராணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. ராஜா பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தேவராஜ் அடிக்கடி ராணி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தேவராஜ் 3 செண்ட் நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு ராணி கேட்டுள்ளார். மேலும் ராணிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தேவராஜ் கண்டித்தும் ராணி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், சம்பவத்தன்று இரவு நிலத்தை எழுதி தருகிறேன். அதற்காக ஆதார் அட்டையை எடுத்து வருமாறு போனில் கூறி உள்ளார். இதனால் ராணி ஆதார் அட்டையுடன் நவதி பகுதிக்கு சென்ற போது வேறு நபருடனான கள்ளத்தொடர்பு குறித்து 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராணியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.