மாவட்ட செய்திகள்

புதிய கோர்ட்டு கட்டிடம் விரைவில் திறக்கப்படுகிறது - நாராயணசாமி + "||" + New Court building is being opened soon - Narayanasamy

புதிய கோர்ட்டு கட்டிடம் விரைவில் திறக்கப்படுகிறது - நாராயணசாமி

புதிய கோர்ட்டு கட்டிடம் விரைவில் திறக்கப்படுகிறது - நாராயணசாமி
புதுவை கோர்ட்டு கட்டிட கட்டுமான பணிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார்.

புதுச்சேரி,

புதுவை கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. 2 மாடிகளை கொண்டு செயல்பட்டு வந்த இந்த கோர்ட்டு வளாகத்தில் 3–வது மாடி கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மாடி கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கட்டிடத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அவரை புதுவை தலைமை நீதிபதி தனபால், தனி அதிகாரி சுப்ரஜா ஆகியோர் வரவேற்றனர்.

புதிய கட்டிடத்தை முதல்–அமைச்சர் முழுமையாக சுற்றிப்பார்த்தார். அந்த கட்டிடத்தை விரைவில் திறக்க ஆவண செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது புதுவை வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் நாராயணகுமார், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் நக்கீரன் மற்றும் வக்கீல்கள் உடனிருந்தனர்.