மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + 6½ poundage chain flush to the school teacher

திருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கந்தன்கொல்லை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(வயது 50). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (46). இவர் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கந்தன்கொல்லையில் சாலையோரம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து உமா மகேஸ்வரி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...