மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் + "||" + TNPSC Free Training Courses for Group -2 Exam

திருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

திருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வு காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 தேர்வு காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வின்சென்ட், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மைய நூலகர் சச்சிதானந்த யோகேஸ்வரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தனசேகரன் மற்றும் பயிற்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.