மாவட்ட செய்திகள்

மகதாயி பிரச்சினையில்நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை + "||" + On the issue of Magadhi Kumaraswamy consulting with officials

மகதாயி பிரச்சினையில்நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை

மகதாயி பிரச்சினையில்நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை
மகதாயி பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு, 

மகதாயி பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

நடுவர் மன்றம் தீர்ப்பு

மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய மூன்று மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கில் மகதாயி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதில் கர்நாடகத்திற்கு 13.4 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி), கோவாவுக்கு 24 டி.எம்.சி., மராட்டிய மாநிலத்திற்கு 1.33 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓரளவுக்கு கர்நாடகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

குமாரசாமி ஆலோசனை

இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் உள்பட நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

மகதாயி பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.