மாவட்ட செய்திகள்

மும்பையில்சிறுமியை கத்திமுனையில் கற்பழித்த வாலிபர் கைதுதிருட்டு நகைகளும் பறிமுதல் + "||" + In Mumbai Rape at the knife Young man arrested

மும்பையில்சிறுமியை கத்திமுனையில் கற்பழித்த வாலிபர் கைதுதிருட்டு நகைகளும் பறிமுதல்

மும்பையில்சிறுமியை கத்திமுனையில் கற்பழித்த வாலிபர் கைதுதிருட்டு நகைகளும் பறிமுதல்
10 வயது சிறுமியை கத்திமுனையில் கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த திருட்டு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மும்பை, 

10 வயது சிறுமியை கத்திமுனையில் கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த திருட்டு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

நகைகள் கொள்ளை

மும்பை பாந்திராவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருத்தி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தாள். திருடும் நோக்கத்தில் அவளது வீட்டிற்குள் அத்துமீறி ஆசாமி ஒருவர் நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை திருட்டு ஆசாமி கத்தி முனையில் மிரட்டி கற்பழித்தார். பின்னர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீடு திரும்பிய தாயிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதையடுத்து உடனடியாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சுற்றி வளைத்தனர்

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை கற்பழித்தது சர் அலி யாசின் சேக்(வயது22) என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பாந்திரா பாரத்நகர் பகுதியில் உள்ள டாடா காலனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர் திருடிய நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.