மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர் + "||" + In Tiruvannamalai: Three persons arrested for producing fake rubber stamp - District Judge trapped in direct study

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்

திருவண்ணாமலையில் : போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேர் கைது - மாவட்ட நீதிபதி நேரடி ஆய்வில் சிக்கினர்
திருவண்ணாமலையில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்படும் ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை மேற்கொண்டார். அதில் நீதிமன்ற வழக்கு கோப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் போலியானது என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவை திருவண்ணாமலை பெரியார் சிலை, கட்டபொம்மன் தெரு, மத்தலாங்குளத்தெருவில் உள்ள ஜெராக்ஸ், ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் கடைகளில் அரசு அனுமதியின்றி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 3 கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடைகளில் அரசு அனுமதியின்றி நீதிபதி, அரசு அலுவலர்கள் சார்ந்த போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்ப்களை நீதிபதிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவற்றை தயாரித்த அரிகிருஷ்ணன் (வயது 32), கதிரேசன் (49), டெல்லிபாபு (35) ஆகிய 3 பேரையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு, டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது
அதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.
2. கோவில் திருவிழாவில் தகராறு, வாலிபருக்கு கத்திக்குத்து - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. காங்கேயம் அருகே பரபரப்பு,போலீஸ்காரர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
காங்கேயம் அருகே போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பு: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது - 28 பவுன் மீட்பு
நெல்லையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 28 பவுன் நகை மீட்கப்பட்டது.
5. உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர் - 31 பவுன் நகைகள் மீட்பு
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை