மாவட்ட செய்திகள்

மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலி + "||" + Railway staff kills

மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலி

மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலி
காரைக்குடி அருகே மேற்கூரை உடைந்து விழுந்து ரெயில்வே ஊழியர் பலியானார்.

சிவகங்கை,

காரைக்குடியை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). ரெயில்வே ஊழியரான இவர் காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து சிவகங்கை ரெயில் நிலையம் வரை உள்ள தண்டவாள பாதைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் பாண்டி சிவகங்கை ரெயில் நிலையத்தின் உள்ளே தண்டவாள பகுதியின் அருகில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மீது ஏறி மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

 அப்போது திடீரென மேற்கூரை உடைந்து விழுந்ததில், அதன் மீது நின்றிருந்த பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மானாமதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேச்சு
திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேசினார்.
2. நம்பியூர் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி வாலிபர் பலி
நம்பியூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
3. கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்
கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணமாக கிடந்தது குறித்து மனைவி, மாமியார் மீது அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தினகரனை நம்பி போட்டியிடுபவர்கள் பலிகடா தான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
5. தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், தேர்தல் பணியை புறக்கணிக்க முடிவு
தபால் வாக்கு சீட்டு வழங்காததை கண்டித்து பயிற்சியை புறக்கணித்துவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 17-ந் தேதிக்குள் வழங்கவில்லையெனில் தேர்தல் பணியை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.