மாவட்ட செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை + "||" + Growing price in Jowar Market

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனை
ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, நெல்லை, கொடைக்கானல் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்கி செல்ல உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரளாவை சேர்ந்தவர்களும் அதிகாலையிலேயே தோவாளையில் குவிவார்கள். இங்கிருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக சாதாரண நாட்களில் விலை குறைவாகவும், பண்டிகை நாட்களில் விலை உயர்ந்தும் காணப்படும்.

தோவாளை மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. ஆயுதபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பூக்களை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு கொண்டு பூக்களை வாங்கினர். இதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை ரூ.800 உயர்ந்து நேற்று ரூ.1,200-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் ரூ.600-ல் இருந்து ரூ.1000 -மாக உயர்ந்தது.

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.130, சிவப்பு கேந்தி ரூ.100, சம்பங்கி ரூ.350, ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.150, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.120, மருக்கொழுந்து ரூ.150, மஞ்சள்கேந்தி ரூ.130, சிவந்தி மஞ்சள் ரூ.150, வெள்ளை சிவந்தி ரூ.200, ஸ்டெம்பு ரோஸ் (1கட்டு) ரூ.150 என விற்பனையானது.

தொடர்புடைய செய்திகள்

1. பால் விலை அதிகரிப்பு எதிரொலி கீரமங்கலம் பகுதியில் டீ, காபி விலை உயர்ந்தது
தமிழ்நாட்டில் பால் விலை அதிகரிப்பால் கீரமங்கலம் பகுதிகளில் உள்ள கடைகளில் டீ, காபி ஆகியவை விலை உயர்ந்தது.
2. வேதாரண்யத்தில், சுட்டெரிக்கும் வெயில்: உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்வு உப்பளங்களில் தேக்கம் அடையும் அபாயம்
வேதாரண்யத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்தி 8 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. உப்பளங்களில் உப்பு தேக்கம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3. காய்கறி விலை கிடுகிடு உயர்வு: நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்
காய்கறி விலை கிடுகிடு உயர்வால், நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
4. குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்வு
குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 10 சென்டி மீட்டர் மழை பதிவானது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
5. மீன்பிடி தடை காலம் எதிரொலி: தஞ்சை மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்வு
மீன்பிடி தடை காலம் எதிரொலியால் தஞ்சை மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.