மாவட்ட செய்திகள்

குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு + "||" + The kabaddi team has won cash prizes for the winning teams

குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு

குறுஞ்சான்வயலில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு
அன்னவாசல் அருகே குறுஞ்சான்வயலில், கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே குறுஞ்சான்வயலில் ஆண்டுதோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கபடிபோட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், சிவகங்கை, குளித்தலை, புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், இலுப்பூர், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை காஞ்சிராம்பட்டி அணியும், 2-வது பரிசை குறுஞ்சான்வயல் அணியும், 3-வது பரிசை புங்கினிப்பட்டி அணியும், 4-வது பரிசை ராஜகிரி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

கபடி போட்டியை அன்னவாசல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை குறுஞ்சான்வயல் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருமானூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.
2. பெரம்பலூரில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம்
பெரம்பலூரில் நடந்த மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
3. குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: கபடியில் அரும்பாவூர் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
பெரம்பலூரில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில், அரும்பாவூர் அரசு பள்ளி மாணவிகள் கபடியில் முதலிடம் பிடித்தனர்.
4. சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி
எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் 626 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் வட்டார அளவில் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
5. நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
குமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.