மாவட்ட செய்திகள்

திருத்தணிமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாஇன்று தொடங்குகிறது + "||" + Thiruthani In the Murugan temple Kanta Sashti Festival

திருத்தணிமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாஇன்று தொடங்குகிறது

திருத்தணிமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாஇன்று தொடங்குகிறது
இன்று திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் சிறப்பான முறையில் சண்முகர் சன்னதி அமைக்கப்பட்டு அங்கு சாமிக்கு லட்சார்சனை நடத்தப் படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த. விழாவையொட்டி கோவிலில் மூலவர் முருகபெருமானுக்கு இன்று மலர் அலங்காரம், நாளை(வெள்ளிக்கிழமை) பட்டு அலங்காரம், 10-ந்தேதி(சனிக்கிழமை) தங்க கவச அலங்காரம், 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவாபரண அலங்காரம், 12-ந்தேதி (திங்கட்கிழமை) வெள்ளிகவச அலங்காரம், 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. புஷ்பாஞ்சலி விழாவும் நடத்தப்படுகிறது. 14-ந்தேதி (புதன் கிழமை) சாமிக்கு திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுகிறது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர்.