மாவட்ட செய்திகள்

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி + "||" + Plus 1 student kills brain fever near Erumapatti

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலி
எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலியானார்.
எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மகன் பரத்(வயது 16). இவர் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவர் பரத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

எருமப்பட்டி அருகே மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்
சாலையோரம் நின்ற மரத்தில் மோதியதால் வேன் நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பலி
திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
5. இருவேறு விபத்து: நெடுஞ்சாலை துறை அதிகாரி உள்பட 2 பேர் பலி
மேலூர் மற்றும் மதுரையில் நடந்த இருவேறு விபத்துகளில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...