மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் பலத்த மழை + "||" + Puducherry is heavy rain

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் பலத்த மழை
புதுவையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் பெய்தது.

அதன்பின் மழை இல்லாமல் இருந்தது. தீபாவளி பண்டிகை தினத்தன்று கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால் அன்றையதினம் மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில் புதுச்சேரியில் காலை சுமார் 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை லேசாகவும், பலமாகவும் விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது. பகல் 11 மணி வரை மழை நீடித்தது. அதன்பின் அவ்வப்போது சூரியன் தலைகாட்டுவதும், மீண்டும் மழை பெய்வதுமாக இருந்தது. மதியம் 2 மணிக்கு மேல் மழை பெய்வது நின்றது. ஆனால் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றப்பட்டது. தற்போது பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தனித்தனியே தாய், மகள் கொலை: ‘கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவிட்டேன்’ கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரியில் தாய், மகளை கொலை செய்த வழக்கில் கைதானவர் தெரிவித்த தகவலின்பேரில் 47 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையடித்த நகைகளை விற்று குதிரை பந்தயத்தில் செலவு செய்ததாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
2. புதுச்சேரியில் வருகிற 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
புதுவையில் வருகிற 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
3. ராமேசுவரத்தில் பலத்த மழை; கடல் சீற்றம்
ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
4. கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
5. பட்டுக்கோட்டையில் பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி
பட்டுக்கோட்டையில், பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...