மாவட்ட செய்திகள்

மண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி + "||" + Public buses do not come from the city buses in the mandabam

மண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி

மண்டபத்தில் அரசு பஸ்கள் ஊருக்குள் வராததால் பொதுமக்கள் அவதி
வேகத்தடை அமைக்கும் பணிகள் மந்தம் 1 வாரத்திற்கு மேலாக மண்டபத்தில் அரசு பேருந்துகள் ஊருக்குள் வராததால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பனைக்குளம்,

மண்டபம் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் செல்லும் அரசு பஸ்களும், மதுரை,திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மண்டபம் ஊருக்குள் செல்லும் சாலையின் வளைவு பகுதியில் விபத்தை தடுக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் வேகத்தடை அமைக்க கடந்த 1 வாரத்திற்கு முன்பு மண்டபம் ஊருக்குள் செல்ல அனைத்து அரசு பஸ்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 1 வாரத்திற்கு மேலாகியும் வேகத்தடை அமைக்கும் பணியோ மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

இதனால் அரசு பஸ்கள் மண்டபம் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்கள்,பெண்கள், வயதானவர்கள் மண்டபம் ஊருக்குள் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.

எனவே மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வேகத்தடை பணியை விரைந்து முடித்து வழக்கம்போல் அனைத்து அரசு பஸ்களும் மண்டபம் ஊருக்குள் வந்து செல்ல நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும் என்று மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாகி, பள்ளமாகி வருவதால் அதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
2. சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டம் 3 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
4. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் தேர்தலை புறக்கணிக்க முடிவு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அனுமதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறினர்.
5. தஞ்சை காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் கடும் அவதி
தஞ்சை காந்திஜி சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.