மாவட்ட செய்திகள்

திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் கலெக்டர் ஆய்வு + "||" + Located in the southern circle of Tirupur Collector's study in general e-service centers

திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள பொது இ-சேவை மையங்களில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர், 

திருப்பூர் தெற்கு வட்டத்திற்குட்பட்ட விஜயாபுரம் மற்றும் கரட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ஊழியர்களிடமும் இதில் உள்ள நிறைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் 292 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் விவசாய வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களும் இதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி ரேஷன் கார்டு, அடையாள் அட்டை பெறுதல் உள்ளிட்ட அரசின் பல்வேறு வகையான திட்டங்களுக்காகவும் இ-சேவை மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் வருவாய்த்துறை சார்பில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். முன்னதாக விஜயாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு பொது இ-சேவை மையங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களுக்கு எந்தவித தாமதமும் இன்றி தங்கள் சேவைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...