மாவட்ட செய்திகள்

பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது + "||" + The purchase price of broiler farms At least Rs 10 per kg

பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது.
சுல்தான்பேட்டை,

தமிழகத்தில் பல்லடம், உடுமலை, சுல்தான்பேட்டை, நெகமம், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழிஉற்பத்தி பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடையுள்ள10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வேன், லாரிகள் மூலம் தினமும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கறிக்கோழி பண்ணைக்கொள்முதல் விலை நுகர்வு ஏற்றம், இறக்கத்திற்கு ஏற்ப பல்லடத்தில்உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.)சார்பில், தினமும் மாலை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு தற்போது, சராசரியாக ரூ. 70 வரை செலவாகிறது. ஆனால், கொள்முதல் விலைபெரும்பாலான நேரங்களில் உற்பத்தி செலவைவிட குறைந்து காணப்படுகிறது. இதனால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள்அடிக்கடி நஷ்டத்தை சந்திக் கின்றனர். கடந்த புரட்டாசி மாதம் நுகர்வு கடுமையாக சரிந்து கொள்முதல்விலையும் குறைந்தது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு கிலோவிற்கு ரூ.15 நஷ்டம் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், கேரளாவில் கடந்த இரு மாதத்திற்கு முன்பு பெய்த வரலாறு காணாத கன மழை மற்றும் வெள்ளத்தால் அங்கு கறிக்கோழி உற்பத்தி தொழில் சீரடையவில்லை.

இதன் எதிரொலியாக கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லும் கோழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சிறிது, சிறிதாக அதிகரித்ததால், நுகர்வும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இதன் எதிரொலியாக பண்ணைக் கொள்முதல் விலையும் அதிகரிக்க தொடங்கியது. இதன் படி கடந்த மாதம் 4-ந் தேதி ஒரு கிலோ ரூ.75 (உயிருடன்) இருந்த கறிக்கோழிபண்ணைக்கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து 21-ந் தேதி ரூ.100-ஐ தொட்டது . பின்னர் தொடர்ந்து விலை சற்று சரிந்து கடந்த 1-ந் தேதி முதல் தொடர்ந்து கிலோ ரூ.84-ஆக இருந்து தீபாவளி பண்டிகை வரை நீடித்தது.

தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் பி.சி.சி. நிர்வாகம் அதிரடியாக கிலோவிற்கு ரூ.10 கொள்முதல் விலையைகுறைத்து கிலோ ரூ.74 ஆக பண்ணைக்கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. விலை குறைப்பு உற்பத்தியாளர்களுக்கு கவலையையும், நுகர்வோர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கொள்முதல் விலை நிலவரப்படி உற்பத்தியாளர்களுக்கு கிலோவிற்கு ரூ. 4 மட்டுமே லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறைச்சி கடைகளில் நேற்று, கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி அன்று கிலோ ரூ. 170 முதல் ரூ.180 வை- ரவிற்பனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.