மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கலந்த மது கடத்தியவர் கைது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மற்றொருவர் ஓட்டம் + "||" + The drug smuggler arrested the police and stopped the car after another

போதைப்பொருள் கலந்த மது கடத்தியவர் கைது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மற்றொருவர் ஓட்டம்

போதைப்பொருள் கலந்த மது கடத்தியவர் கைது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மற்றொருவர் ஓட்டம்
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கலந்த மது பாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரை கண்டதும் மது பாட்டில்களுடன் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் வெங்கங்குடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் போதைப் பொருள் கலந்த 10 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரதீபன் என்கிற சித்தார்த் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபடுவதை கண்டதும் அவ்வழியே காரில் வந்த ஒருவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார், அந்த காரை சோதனை செய்தபோது அதிலும் போதைப் பொருள் கலந்த 30 மது பாட்டில்கள் இருந்து தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சம் போதைப்பொருளுடன் 4 பேர் சிக்கினர்
மும்பையில் வெவ்வேறு இடங்களில் ரூ.16 லட்சத்து 14 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. சென்னை முழுவதும் போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை
சென்னை முழுவதும் மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
3. பாந்திரா டெர்மினசில் ரூ.1¼ லட்சம் போதைப்பொருளுடன் வாலிபர் கைது
மும்பை பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் போதைப் பொருளுடன் நின்று கொண்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
4. கோவையில் 24 மணி நேரமும் மது விற்பனை படுஜோர்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி போலி மது தாராளம்
கோவையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி 24 மணி நேரமும் போலி மது விற்பனை செய்யப்படுகிறது.
5. இருவேறு சம்பவங்களில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
மும்பையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் கடத்தி செல்வதற்காக டாக்சியில் ரெயில் நிலையத்துக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டோங்கிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.