மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி + "||" + The collision with motorcycle women kills

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் பெண் பலியானார்.
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் மேட்டு காலனி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58). லாரி டிரைவர். இவரது மனைவி காளியம்மாள் (50). மகன் தேவன் (30), மகள் மருதாணி ( 25). இவர்களில் தேவன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தேவன் தன்னுடைய தாய் காளியம்மாள், தங்கை மருதாணியை மோட்டார்சைக்கிளில் ஏற்றி கொண்டு பென்னாலூர்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

வெலமகண்டிகை பகுதியில் செல்லும்போது புலிகுன்றம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் காளியம்மாள், தேவன், மருதாணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காளியம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காளியம்மாள் இறந்தார்.

இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பள்ளி ஊழியர்கள் 2 பேர் பலி
மதுரவாயல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பள்ளிக்கூட ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. மோட்டார் சைக்கிள்கள் மோதல், தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர்.
4. பட்டிவீரன்பட்டி அருகே பயங்கரம், மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 தொழிலாளர்கள் பலி
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
5. உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி சாவு
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.