மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார் + "||" + In the 11th delivery of pregnancy, a baby girl was born and refused to go to hospital and gave birth at home

கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்

கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டில் பெற்றெடுத்தார்
முசிறியில் 11 குழந்தைகள் பெற்ற கர்ப்பிணிக்கு 11-வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
முசிறி,

திருச்சி மாவட்டம், முசிறி கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி(45). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. இதில் 10 பிரசவங்களில் சாந்தி 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவை அனைத்திலும் சாந்திக்கு, அவர் கணவர் கண்ணனே வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். இதில் மூன்றாவது பிரசவத்தில் சாந்திக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்த தம்பதிக்கு பிறந்த சீதா(22), கீதா(20), கார்த்திக்(19), உதயகுமாரி(19), தர்மராஜ்(16), சுபலட்சுமி(13), கிருத்திஸ்கா(11), தீபக்(9), தீப்தி(8), ரிட்டிஸ் கண்ணன்(7), பூஜா(5) ஆகிய 11 குழந்தைகளில், தீப்தி மற்றும் ரிட்டிஸ்கண்ணன் ஆகியோர் உடல்நல குறைவால் இறந்து விட்டனர். சீதாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் சீதாவும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். மேலும் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் சாந்தி 11-வது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்தியை முசிறி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள செவிலியர்கள் அழைத்தனர். ஆனால் அவர் செல்ல மறுத்து வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக கூறினார்.

இதையடுத்து மாவட்ட தாய், சேய் நல அதிகாரி உஷாராணி, தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக் மற்றும் போலீசார் சாந்திக்கு அறிவுரை கூறி, அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் 25-ந் தேதி அழைத்து சென்றனர். அங்கு சாந்திக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்த சாந்தி தீபாவளிக்கு வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீட்டிலேயே இருந்த சாந்திக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்து, கணவர் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் உதவியுடன் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தை பெற்ற சிறிது நேரத்திலேயே சாந்தி வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்துள்ளார். பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி தாய், குழந்தை இருவரும் தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளனர்.