மாவட்ட செய்திகள்

“அவன் இவன்” பட விவகாரம்:அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர் + "||" + "Avan Ivan" film affair: in ambai court Director Bala Azhar

“அவன் இவன்” பட விவகாரம்:அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்

“அவன் இவன்” பட விவகாரம்:அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
“அவன் இவன்” பட விவகாரம் தொடர்பாக அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜரானார்.
அம்பை, 

“அவன் இவன்” பட விவகாரம் தொடர்பாக அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜரானார்.

“அவன் இவன்” பட வழக்கு

கடந்த 2011-ம் ஆண்டு டைரக்டர் பாலா இயக்கிய “அவன் இவன்” திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் குறித்து அவதூறாக சித்தரிக் கப்பட்டிருந்ததாக கூறி, சிங்கம் பட்டி ஜமீன்தாரின் மகன் சங்கர் ஆத்மஜன் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக் காக நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா மற்றும் படத்தயாரிப் பாளர் கல்பாத்தி அகோரம் ஆகிய 3 பேரும் அம்பை கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து கல்பாத்தி அகோரம் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். 3 மாதங் கள் கழித்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அம்பை கோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத தால், டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா ஆகிய இருவருக்கும் பிணையில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டைரக்டர் பாலா ஆஜர்

இந்நிலையில் இந்த வழக்கு அம்பை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் டைரக்டர் பாலா ஆஜரானார். நடிகர் ஆர்யா ஆஜராக வில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் வருகிற 16-ந் தேதிக்கு (வெள்ளிக் கிழமை) விசாரணையை ஒத்தி வைத்தார். நடிகர் ஆர்யாவுக்கு ஏற்கனவே பிடிவாரண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.