மாவட்ட செய்திகள்

பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு + "||" + If you find a sexual harassment, send a post to the Collector Collector

பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு

பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் கலெக்டர் அன்பழகன் பேச்சு
ஆசிரியர்கள்-மாணவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலை கண்டறிந்தால் தபால் அனுப்பலாம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் பேசினார்.
கரூர்,

கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக பாதுகாப்புத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை, குழந்தை திருமணம், கல்வி இடைநிற்றல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவற்றை கண்டறிந்தால் ஆசிரியர்கள், மாணவர்கள் அது பற்றிய தகவல் குறித்து கடிதம் எழுதி, தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தபால் அனுப்பலாம்“ என்றார்.

தொடர்ந்து பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், இடஒதுக்கீடு விவரம் ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் முகவரி அச்சிடப்பட்ட தபால் கடிதம் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சு.கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நன்னடத்தை அதிகாரி தேவகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட கல்வி அதிகாரி கனகராஜ், இலவச சட்டப்பணிகள் ஆணைகள் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில் சுதந்திர தின விழா: 139 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
நாகையில் சுதந்திர தின விழாவில் 139 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
2. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் நம்பிக்கையூட்ட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி பேசினார்.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் இருமத்தூரில் கலெக்டர் மலர்விழி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இருமத்தூரில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பங்கேற்றார்.
4. அரசு வழங்கும் ரூ.12 ஆயிரத்தின் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட வேண்டும் கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் வேண்டுகோள்
அரசு வழங்கும் ரூ.12 ஆயிரத்தின் மூலம் தனி நபர் கழிப்பறை கட்ட வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
5. அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வலியுறுத்தினார்.