மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு + "||" + The boycott of the work of the village administration officials to emphasize demands

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் பணி புறக்கணிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்லைன் மூலம் சான்றிதழ் பதிவேற்றும் பணியை கிராம நிர்வாக அதிகாரிகள் புறக்கணித்தனர்.
பெரம்பலூர்,

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கணினி, இணையதள வசதி, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் 94 பேர் நேற்று முதல் ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

வேலை நிறுத்த போராட்டம்

கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் வருகிற 5-ந்தேதி தாசில்தார் அலுவலகத்தில் இரவு நேர தர்ணா போராட்டத்திலும், 7-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டமும், 10-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வும் அவர்கள் தெரிவித்தனர்.