மாவட்ட செய்திகள்

ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி + "||" + Trains stop at Mandapam for 2nd day Rameswaram passengers suffer

ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி

ரெயில்கள் 2–வது நாளாக மண்டபத்துடன் நிறுத்தம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் ராமேசுவரம் பயணிகள் அவதி
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் விழுந்த விரிசலால் 2–வது நாளாக நேற்றும் மண்டபத்துடன் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ராமேசுவரம் செல்ல இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். மீண்டும் எப்போது ரெயில் சேவை தொடங்கும் என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் அனைத்து ரெயில்களும் 20 கிலோ மீட்டர் வேகத்தின்தான் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தூக்கு பாலத்தின் மையப்பகுதியில் இணைப்பு கம்பிகளில் திடீரென பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ராமேசுவரம்–மண்டபம் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் மீண்டும் இயக்கப்பட்டன. நேற்று காலையில் 2–வது நாளாக ராமேசுவரம் வந்த சென்னை ரெயில்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன.

ரெயில்வே அதிகாரிகள் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு பாம்பன் ரெயில் பாலத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சுமார் 2 மணி நேர ஆய்வுக்கு பின்னர் மண்டபத்தில் இருந்து ரெயில் என்ஜினை மட்டும் கொண்டு வந்து, 5 கிலோ மீட்டர் வேகத்தில் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தார்கள். பின்னர் பாம்பனில் இருந்து 15 கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் அந்த என்ஜினை பாலத்தில் இயக்கினர்.

பாலம் பழுதால் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளில் என்ஜினை பொருத்தி, மெதுவாக பாம்பன் ரெயில்பாலம் வழியாக இயக்கப்பட்டு, மானாமதுரைக்கு கொண்டு வந்தனர். இவ்வாறு சோதனை நடைபெற்றாலும் நேற்று முழுவதும் ராமேசுவரத்துக்கு பயணிகளுக்கான ரெயில் சேவை எதுவும் நடைபெறவில்லை.

இதுகுறித்து தென்னக ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு கூறியதாவது:–

பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல்கள் சரி செய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் அதன் உறுதி தன்மையை கருவி மூலம் ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர்தான் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது இந்த தூக்குப்பாலத்தில் ரெயில்கள் இயக்கப்படமாட்டாது.

ராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல மறு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்படும். இங்கு புதிய ரெயில் பாலம் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரத்துக்கு ரெயில்களில் வரும் பயணிகள், மண்டபம் வந்து அதன் பின்னர் சிறப்பு பஸ் வசதி மூலம் ராமேசுவரத்துக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவதி அடைந்தனர். ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் வரை பயணிகள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவச பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கம்
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இலவசமாக பேட்டாரி கார்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
2. வழிதெரியாமல் சென்றதால் விபரீதம்: தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதல் இறங்கி ஓடியதால் 5 பேர் தப்பினர்
உடுமலை அருகே வழி தெரியாமல் சென்றதால் தண்டவாளத்தில் சிக்கி கொண்ட கார் மீது சரக்கு ரெயில் மோதியது. காரில் இருந்தவர்கள் சரக்கு ரெயில் மோதுவதற்கு முன் இறங்கி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக 5 பேரும் உயிர் தப்பினர்.
3. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே ரெயில் சேவை தொடங்குவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை- திருவாரூர் அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்து அதிவேக சிறப்பு ரெயில் சோதனை ஒட்டம் முடிவடைந்துள்ளதால் ரெயில் போக்குவரத்து எப்போது தொடங்கும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
4. மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளராக தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்மூலம் 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை ரூ.2¼ கோடி வருமானம்
மதுரை–சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரு மார்க்கங்களிலும் பயணிகள் போக்குவரத்து மூலம் கடந்த 2–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை சுமார் ரூ.2¼ கோடி வருமானமாக கிடைத்துள்ளது.