மாவட்ட செய்திகள்

தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் + "||" + Village Administrative Officers Struggle

தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்

தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடிப்பட்டி,

கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இணையதள வசதி செய்து தர வேண்டும், மாவட்ட கலந்தாய்வு ஒரேநாளில் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவுநேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிவரை நடைபெறும் என்று சங்கத்தினர் தெரிவித்தனர்.

வாடிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். கோட்ட துணைத்தலைவர் பாலகண்ணன் முன்னிலை வகித்தனர். வட்டகிளைத்தலைவர் கெங்கராஜ் வரவேற்றார். இந்த போராட்டத்தை மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தொடங்கிவைத்து விளக்கி பேசினார். இதில் மாவட்டகூட்டுறவுசங்கதலைவர் பாண்டி, வட்டகிளைபொருளாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் செந்தில்குமார், முகிலன், ஜெயராஜ், முருகேசன் உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் வட்டகிளைசெயலாளர் மணிவேல் நன்றிகூறினார்.

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். இதில் 53 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மேலூர், உசிலம்பட்டி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
2. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலம் அருகே இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஈரோடு ஆர்.என்.புதூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் அடிப்படை வசதி கேட்டு நடந்தது
ஈரோடு ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. 3–வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தபால் ஓட்டுப்பதிவை ரத்து செய்யக்கோரி அ.ம.மு.க.–தே.மு.தி.க. போராட்டம்
தபால் ஓட்டுப்பதிவை ரத்து செய்யக்கோரி திருவொற்றியூரில் அ.ம.மு.க.– தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.