மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி + "||" + ADMK On behalf of to Jayalalithaa image Flower Tribute

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி

அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி
ஈரோட்டில், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவபடத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெகதீஷ் தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகுசேகர், ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் சின்னச்சாமி, துணைச்செயலாளர் வீரக்குமார் மற்றும் அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் நந்தகோபால், கேபிள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இதில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் மின்மணி, முன்னாள் கவுன்சிலர் ராதாகோபால், சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

சூரியம்பாளையம் பகுதி அ.தி.மு.க. சார்பில், சூளை பகுதியில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமை தாங்கி, ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் தொகுதி செயலாளர் எம்.ஜி.பழனிசாமி, வீரப்பன்சத்திரம் கூட்டுறவு வங்கி தலைவர் தாமோதிரன், முன்னாள் மண்டல தலைவர் முனியப்பன், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணராஜ், வட்ட செயலாளர்கள் துரைசாமி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வாக்களித்தனர்
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நிலக்கோட்டையில் வாக்களித்தனர்.
2. ஓசூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
ஓசூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
3. அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
4. அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு வராது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூறினார்.
5. தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை - வைகோ கேள்வி
தமிழ்நாட்டுக்கு வருகிற ஆபத்தான திட்டங்களை தடுப்பதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை என்று வெள்ளகோவிலில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.