மாவட்ட செய்திகள்

ராமர் கோவில் கட்ட வலியுறுத்திஇந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Urged to build Rama Temple The Hindu Frontiers demonstrated

ராமர் கோவில் கட்ட வலியுறுத்திஇந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

ராமர் கோவில் கட்ட வலியுறுத்திஇந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, ஓசூரில் இந்து முன்னணியினர் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
தர்மபுரி,

இந்து முன்னணி சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஓசூரில் நேற்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் காவி கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் சத்யகோபால் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட செயலாளர் உமேஷ் முன்னிலை வகித்தார்.

இதில், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் முருகன், சிவா, அப்பண்ணா உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில், நகர துணை தலைவர் வேல்மணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்குமால் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் சங்குமல் கடற்கரையில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.
4. டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் பொதுமக்கள் எச்சரிக்கை
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் கூறினர்.
5. சிக்கல் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சிக்கல் கிராமத்தில் பொதுமக்கள் காலி குடங்களுடன் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.