மாவட்ட செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டுகாயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-கடையடைப்பு + "||" + Babri Masjid demolition day Muslim protest demonstration in Kayalpattinam

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டுகாயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-கடையடைப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டுகாயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்-கடையடைப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி, 

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம், மெயின் ரோடு மற்றும் தெருக்களில் உள்ள அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. ஓட்டல், டீக்கடை, மெடிக்கல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்படாததால், நகரம் வெறிச்சோடியது. பெரும்பாலான வாடகை கார், வேன், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடித்திட வேண்டும். அங்கு சட்ட விரோதமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வழிபாடு அமைப்பை அகற்ற வேண்டும். அங்கு மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

மாவட்ட தலைவர் காதர் முகைதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அபுதாஹிர், திராவிடர் விடுதலை கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் பால் பிரபாகரன், சமூக ஆர்வலர் சகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் ஆகியோர் பேசினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் காதர் முகைதீன், செயலாளர் மைதீன் கனி, பொதுச்செயலாளர் உஸ்மான், தொகுதி தலைவர் முகம்மது உமர், செயலாளர் தாஹீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் சம்சுதீன், வர்த்தக அணி தலைவர் ஹபிப் ரஹ்மான், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் யூனுஸ் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.