மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையத்தில்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + In Mettupalayam: Muslim organizations demonstrated

மேட்டுப்பாளையத்தில்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேட்டுப்பாளையம்,

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகர தலைவர் அஷ்ரப்அலி தலைமை தாங்கினார். பஷீர்அகமது, சலீம், அகமது சித்திக், அபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகமதுசேட் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் ஜாபர்சாதிக், தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குடியரசு, ம.தி.மு.க. சார்பில் இக்பால், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சக்திவேல் குமரன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் ஹக்கீம், அஜ்மீர்கான் மற்றும் பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க.வினர், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சிராஜ்தீன் நன்றி கூறினார்.

இதுபோல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொது செயலாளர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக புறநகர் மாவட்ட தலைவர் பா.ராமச்சந்திரன், பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா மாவட்ட தலைவர் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முகமதுஅலி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம் தொடங்கி வைத்தார்.

எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் விளக்கி பேசினார். நாம் தமிழர் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் முகமது நவுபல் நன்றி கூறினார். துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.