மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலிஆட்டோ மோதியது + "||" + A motorbike government bus driver kills Auto crashed

மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலிஆட்டோ மோதியது

மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் பலிஆட்டோ மோதியது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் திருக்குமார்(வயது 43). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சேதுநாராயணபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு சாலையில் சுந்தரமகாலிங்கம் என்பவரது தென்னந்தோப்பு அருகே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருக்குமாரை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை ஓட்டி வந்த சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் வனமுத்து என்பவரை கைது செய்தனர். டிரைவர் திருக்குமாருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பர்கூர் அருகே விபத்து: லாரி-மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலி 3 பேர் படுகாயம்; 100 ஆடுகள் செத்தன
பர்கூர் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 100 ஆடுகள் செத்தன.
2. சென்னிமலை அருகே பரிதாபம் லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து
சென்னிமலை அருகே லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
3. பள்ளி வேன் விபத்து: பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
பள்ளி வேன் விபத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க தேவகோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
4. மோட்டார்சைக்கிள்–லாரி மோதல்: தறித்தொழிலாளி பரிதாப சாவு; நண்பர் படுகாயம்
மோட்டார்சைக்கிள்–லாரி மோதிக்கொண்ட விபத்தில் தறித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
5. சேலத்தில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து சொகுசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் பனியன் கம்பெனி அதிபர் பலி 18 பேர் காயம்
சேலத்தில் அதிகாலையில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்து விழுந்ததில் பனியன் கம்பெனி அதிபர் பரிதாபமாக இறந்தார். இதில் 18 பேர் காயம் அடைந்தனர்.