மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை + "||" + In Erode: The retired head editor ignited suicide

ஈரோட்டில்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை

ஈரோட்டில்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, 

ஈரோடு சூரம்பட்டி விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 73). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சொர்ணம்மாள். இவர்களுக்கு சரவண அரவிந்தன் என்ற மகன் உள்ளார். முருகேசன் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது அறையில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரது அறையை எட்டிப்பார்த்தனர். அப்போது முருகேசன் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரது படுக்கையும் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் முருகேசனின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, முருகேசன் கால்வலியால் அவதிப்பட்டு வந்ததும், இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும் தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலை செய்ய முடிவுசெய்து நேற்று முன்தினம் இரவு அவரது படுக்கையில் தீ வைத்துக்கொண்டு, பின்னர் பற்றி எரியும் தீயில் அவர் விழுந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...