மாவட்ட செய்திகள்

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை + "||" + Villianur Commune Panchayat Office PMK Siege with mosquito

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் கொசுவலையுடன் முற்றுகை
நோய் பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தக் கோரி கொசு வலையுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், குப்பைகள் அள்ளப்பட வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டியும் பா.ம.க. சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கொசுவலையுடன் முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் புகுந்து தரையில் அமர்ந்து கொசுவலையை தலைக்குமேல் உயர்த்தி பிடித்து கோஷம் எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெஞ்ஞானபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை குடிநீர் சீராக வினியோகம் செய்ய கோரிக்கை
மெஞ்ஞானபுரம் அருகே பரமன்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
2. ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
ஆலங்குளம் அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. கல்லூரி மாணவி கொலை: பா.ம.க.வினர் சாலை மறியல்; போலீஸ் நிலையம் முற்றுகை தொடர் போராட்டங்களால் விருத்தாசலம் அருகே பதற்றம்
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.