மாவட்ட செய்திகள்

திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய மாதர் சங்கம் மனு + "||" + Transgender Guard Suicide attempt To make the case Mather associate petition

திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய மாதர் சங்கம் மனு

திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய மாதர் சங்கம் மனு
திருநங்கை காவலர் தற்கொலை முயற்சி தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாதர் சங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்து உள்ளது.
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த திருநங்கை காவலர் நஸ்ரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் உயிர்பிழைத்து தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பொன்னுத்தாய் தலைமையில் மாவட்ட தலைவர் வடகொரியா, மாவட்ட செயலாளர் கண்ணகி உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பாகவும், அதற்கு காரணமானவர்கள் என்று திருநங்கை நஸ்ரியா தெரிவித்த 3 காவல் துறை அதிகாரிகள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளதாகவும், விசாரணை அறிக்கையின் முடிவில் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மனநிலை பாதித்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி , ஆரணி போலீஸ் நிலையம் முன் பரபரப்பு
பணம் திருட்டுப்போனதாக கூறி போலீஸ் நிலையம் முன் மனநிலை பாதித்த தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. நெய்வேலியில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நெய்வேலியில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. குடும்ப தகராறில் 3 வயது குழந்தையுடன் தந்தை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சிவகங்கை அருகே குடும்பத் தகராறில் 3 வயது குழந்தையுடன் ரெயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலைக்கு முயன்றார்.
4. பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரி
பழனியில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கேரள வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.