மாவட்ட செய்திகள்

வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல், மேலாளர் கைது + "||" + Seized sandalwood luggage, Manager arrested

வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல், மேலாளர் கைது

வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல், மேலாளர் கைது
வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வில்லியனூர்,

புதுவை வில்லியனூர் உளவாய்க்கால் பகுதியில் தனியார் வைத்தியசாலை இயங்கி வருகிறது. இங்கு சந்தனமரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் குமார், துணை வனகாப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சுமார் 40 கிலோ எடையுள்ள சந்தனை கட்டைகள் சாக்கு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வைத்தியசாலையின் மேலாளர் விஜயன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். வைத்திய சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த வைத்தியசாலையின் நிறுவனர் முகமது பஷீர் என்பவரை தேடிவருகிறார்கள். அந்த சந்தன கட்டைகள் கேரள மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. பேக்கரி மாஸ்டரை கொல்ல முயன்றவர் கைது
ராமநாதபுரம் நகரில் உள்ள பேக்கரி மாஸ்டரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
2. திருப்பூரில் இருதரப்பினர் மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து; 8 பேர் கைது
திருப்பூரில் இருதரப்பினர் மோதியதில் வாலிபருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.42 ஆயிரம் அபராதம்
சேலத்தில் உள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
4. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
5. சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது
மும்பையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.