மாவட்ட செய்திகள்

ஒருதலை காதலால் விபரீதம்மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம்; வாலிபர் கைது + "||" + Minor girl forced to kidnap a woman; Young man arrested

ஒருதலை காதலால் விபரீதம்மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம்; வாலிபர் கைது

ஒருதலை காதலால் விபரீதம்மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம்; வாலிபர் கைது
ஒரு தலை காதலால் மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் மற்றும்இதற்குஉடந்தையாக இருந்த மதகுரு உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மைசூரு, 

ஒரு தலை காதலால் மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபர் மற்றும்இதற்குஉடந்தையாக இருந்த மதகுரு உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மைனர் பெண் மீது ஒரு தலைகாதல்

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகாவை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை உன்சூர் பகுதியை சேர்ந்த பாஜில் அக்ரம் (வயது 25) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். தனது காதலை அவர் மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாஜில் அக்ரம் கடந்த மாதம் (நவம்பர்) 13-ந்தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவியை கடத்திச் சென்றுவிட்டார். கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பிரியப்பட்டணா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கடத்தி கட்டாய திருமணம்

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மைனர் பெண்ணின் தந்தை விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி கடந்த நவம்பர் மாதம் 13-ந்தேதி பாஜில் அக்ரம் என்பவர் மைனர் பெண்ணை கடத்திச் சென்று, ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் உள்ள ஒரு மசூதியில் வைத்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். மேலும் மைனர் பெண்ணை அவர் கற்பழித்ததும் தெரியவந்தது.

இந்த திருமணத்தை அந்த மசூதியின் மதகுருவான அப்துல் வாகீத் என்பவர் ரூ.50 ஆயிரம் வாங்கிக்கொண்டு நடத்தி வைத்ததும், இதற்கு ஹாசனை சேர்ந்த மனித உரிமைகள் சங்கத் தலைவர் சயாத் அஜாஜ், உறுப்பினர்களான சையத் நகீம், ஆலூரு அஜீம், பிரியப்பட்டணாவை சேர்ந்த மெக்கானிக் மொயின் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

6 பேர் கைது

இதைதொடர்ந்து போலீசார் உன்சூரில் பாஜில் அக்ரம் வீட்டில் இருந்து மைனர்பெண்ணை மீட்டனர். மேலும் மைனர் பெண்ணை கடத்தி கட்டாயத் திருமணம் செய்த பாஜில் அக்ரம், உடந்தையாக இருந்த மதகுரு அப்துல் வாகீத், சயாத் அஜாஜ், சையத் நகீம், அஜீம், மொயின் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.