மாவட்ட செய்திகள்

ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி + "||" + Railway has condemned water cascading under the bridge The public is trying to stir the road

ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
ரெயில்வே கீழ்மட்ட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை கண்டித்து சாலை மறியல் செய்ய முயன்ற பொதுமக்களை ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது மாக்கினாம்பட்டி. இந்த வழியாக பொள்ளாச்சி–மதுரை அகலரெயில் பாதை செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக ரெயில்பாதையை கடந்து செல்ல கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் தேங்குகின்றன.

இதுகுறித்து கடந்த மாதம் ஆய்வு செய்த அமைச்சர், எம்.பி. ஆகியோர் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை தடுக்க தற்காலிமாக குழாய் அமைக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் ஒரு மாதமாகியும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக ரெயில்வே பாலம் பகுதியில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்த பாதையை மாக்கினாம்பட்டி, ஜோதிநகர், நாட்டுக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீர் தேங்கி நிற்பதாலும், சாலை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ–மாணவிகள் தவறி விழுந்து விடுகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 6 பேர் வரை கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர். எனவே குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கவில்லை என்றால் மறியலில் ஈடுபடுவோம் என்றனர். அதற்கு அதிகாரிகள் பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குழாய் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக மாக்கினாம்பட்டியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேச்சு
திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் சாருபாலா தொண்டைமான் பேசினார்.
2. அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. ஈரோடு ஆர்.என்.புதூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் அடிப்படை வசதி கேட்டு நடந்தது
ஈரோடு ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. செய்யாறில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
செய்யாறில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.