மாவட்ட செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது + "||" + The National People's Court has settled 1,300 cases

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,300 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது
புதுச்சேரியில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.4¾ கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி,

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான மதன் பீமாராவ் லோகூர் உத்தரவின் படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின் படி புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதன்மை சார்பு நீதிபதி எழிலரசி, மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் 9 அமர்வுகளும், காரைக்காலில் 2 அமர்வுகளும், மாகி மற்றும் ஏனாமில் தலா ஒரு அமர்வும் நடந்தது. இதில் சமாதானம் செய்யக்கூடிய கிரிமினல், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன்–மனைவி பிரச்சினை, குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்சம், உரிமையியல், சிவில், தொழிலாளர் பிரச்சினை, வங்கி கடன் என மொத்தம் 6,124 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 1,306 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 75லட்சத்து 57 ஆயிரத்து 890 இழப்பீடாக வழங்கப்பட்டது. நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு வழக்கில் தீர்வு பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியின்றி பேரணி சென்ற தே.மு.தி.க. செயலாளர் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேரணி சென்ற தே.மு.தி.க. செயலாளர் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு.
2. சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம்
சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
3. மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு
மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கி.வீரமணி காரில் கல் வீசியவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்ற காரில் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தவறான தகவல்களை பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.