மாவட்ட செய்திகள்

புதிய மணல் குவாரி பிரச்சினை: அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் + "||" + New sand quarry problem: Amaravathi environmental protection activists hunger strike

புதிய மணல் குவாரி பிரச்சினை: அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

புதிய மணல் குவாரி பிரச்சினை: அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
புதிய மணல் குவாரி அமைக்கும் பிரச்சினை குறித்து அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கரூர்,

கரூர் மாவட்ட அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தென்னரசு வரவேற்று பேசினார்.

சாமானிய மக்கள் நலக்கட்சி பொது செயலாளர் குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க நிர்வாகி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தனபால், திராவிடர் கழக நிர்வாகி அன்பு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமராவதி ஆற்றில் மணல் எடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பபெற வேண்டும். இது தொடர்பான பிரச்சினை குறித்து அனைத்து அமைப்புகளை திரட்டி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது, கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், கோயம்பள்ளி, புலியூர், பஞ்சமாதேவி, பள்ளபாளையம், போன்ற பகுதிகளில் அமையவுள்ள புதிய மணல் குவாரியினால் ஏற்படும் பிரச்சினை குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பின்னர் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் கடன் திட்ட குறைபாடுகளை களைய இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுடன் பொது மேலாளர் ஆலோசனை
மத்திய அரசின் கடன் திட்ட குறைபாடுகளை களைய இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுடன் பொது மேலாளர் ராமு திருச்சியில் ஆலோசனை நடத்தினார்.
2. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிசாரா பணிகளை வழங்கக்கூடாது செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிசாரா பணிகளை வழங்கக்கூடாது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளி நடப்பு செய்தனர்.
4. மக்கள் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார்.
5. அரசின் திட்டங்கள் ஏழை-எளியோரை சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும்
அரசின் திட்டங்கள் ஏழை- எளியோரை சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.