மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு அருகேஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு + "||" + The death of 2 students drowned in the lake

செங்கல்பட்டு அருகேஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

செங்கல்பட்டு அருகேஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள பாரதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் இம்ரான் என்ற சுசில் (வயது15). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சத்யா (12).

இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள வெங்கிடாபுரம் ஊராட்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாவு

இந்த நிலையில் நேற்று சத்யா தனது சொந்த ஊரான பாரதபுரத்திற்கு சென்றார். பின்னர் தனது நண்பரான சுசில் உள்ளிட்ட 5 பேருடன் அங்கு உள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத சுசில் மற்றும் சத்யா ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இருவரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து சக நண்பர்கள் அவர்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். மேலும் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.