மாவட்ட செய்திகள்

தானே அருகேபூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்ரூ.6¼ லட்சம் நகைகள் பறிமுதல் + "||" + Near Thane Two robbers were trapped in locked houses Rs.6 lakhs jewelery seized

தானே அருகேபூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்ரூ.6¼ லட்சம் நகைகள் பறிமுதல்

தானே அருகேபூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர்ரூ.6¼ லட்சம் நகைகள் பறிமுதல்
பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6¼ லட்சம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தானே, 

பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6¼ லட்சம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

பூட்டிய வீடுகளில் கொள்ளை

தானே அருகே மும்ரா மற்றும் திவா பகுதியில் பூட்டி கிடக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மும்ரா நெடுஞ்சாலையில் சந்தேகப்படும் படி நடமாடி கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் இருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் பூட்டு உடைக்கும் கருவிகள், மிளகாய் பொடி மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

2 பேர் கைது

விசாரணையில், பிடிபட்டவரின் பெயர் விலாஸ் ஷிட்கே என்பதும், அவர் தனது கூட்டாளிகள் அலோக், ராமசந்திராவுடன் சேர்ந்து பூட்டி கிடந்த வீடுகளில் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விலாஸ் ஷிட்கே மற்றும் ராமசந்திராவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அலோக்கை தேடி வருகின்றனர்.

போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து ரூ.6 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.