மாவட்ட செய்திகள்

தாராவியில்11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + In Dharavi The 11th grade student was killed by suicide

தாராவியில்11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தாராவியில்11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தாராவியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை, 

தாராவியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ஐயாபிள்ளை. கார் டிரைவர். இவர் தாராவி, பால்வாடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சுபஸ்ரீ (வயது17). பாந்திராவில் உள்ள ஜூனியர் கல்லூரியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி சுபஸ்ரீ மாநில அளவிலான ஆக்கி போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர் ஆவார்.

இந்தநிலையில், மாணவி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து சென்ற சாகுநகர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளையாட்டில் சாதித்து வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பால்வாடி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.