மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது + "||" + At the RS Mangalam Union office Two persons arrested for bribing

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் காந்தி நகரில் 1 ஆயிரத்து 404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார். இதற்கு கட்டிட அனுமதிக்காக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சண்முகம் இவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சண்முகம், அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியோர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சம்மாளிடம் பணம் கொடுக்கும்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சம்மாளையும், திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தையும் கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து ராமநாதபுரம் கொண்டு சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது
ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது செய்யப்பட்டார்.
2. ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பும் பணத்தில் ரூ.50½ லட்சம் கையாடல்; 4 பேர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பும் பணத்தில் ரூ.50½ லட்சத்தை கையாடல் செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. காரைக்குடி அருகே இருதரப்பினர் மோதல்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள் - கல் வீசப்பட்டதில் 58 பேர் கைது, துணை சூப்பிரண்டு காயம்
காரைக்குடி அருகே இருதரப்பினர் மோதலில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 58 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.
4. வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வெடிமருந்து சப்ளை செய்தவர் கைது
வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வெடி மருந்து சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
5. சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே மிளகாய்பொடி, கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபடுவதற்காக மிளகாய்பொடி மற்றும் கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்தனர்.