மாவட்ட செய்திகள்

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது + "||" + Police arrest 11 people in an on-line lottery centers

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது

ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை 11 பேர் கைது
ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்ததாக புகார். ஆன்-லைன் லாட்டரி மையங்களில் போலீசார் அதிரடி சோதனை. 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை தாதர் சிவாஜி பார்க், பைகுல்லா, காலாசவுக்கி, அக்ரிபாடா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அச்சிடப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யாமல், கையால் எழுதப்பட்ட சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்து வருவதாக மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த இடங்களில் உள்ள 7 ஆன்-லைன் லாட்டரி மையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, மேற்படி கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த மையங்களில் இருந்து 11 கணினிகள், ஹார்டு டிஸ்க்குகள், 5 செல்போன்கள் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கத்தியால் குத்தி தொழிலாளி கொலை: மைத்துனர் உள்பட 2 பேர் கைது
குத்தாலத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மைத்துனர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
3. தோசை மாவு பிரச்சினையில் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் மளிகை கடைக்காரர் கைது
தோசை மாவு பிரச்சினையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
4. மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரிப்பு 4 பேர் கைது
மணப்பாறை அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது
மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.