மாவட்ட செய்திகள்

“திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” எச்.ராஜா பேட்டி + "||" + If Thirumavalavan sues me, I'm ready to meet him H. Raja

“திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” எச்.ராஜா பேட்டி

“திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்” எச்.ராஜா பேட்டி
மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மதுரை,

ரபேல் விமான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இது ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு பதிலடியாக அமைந்து இருக்கிறது.

கடந்த 4½ ஆண்டுகளில் ஊழல் இல்லாமல் சிறந்த முறையில் ஆட்சி செய்த பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். 5 மாநில மக்களிடம் பா.ஜ.க. ஊழல் செய்ததாக பொய் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆட்சியை பிடித்துள்ளன.

தமிழகத்தில் ஆணவ கொலைகளுக்கு திராவிட இயக்கங்கள் மற்றும் திருமாவளவன் ஆகியோர்தான் காரணம். திருமாவளவன் என் மீது வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்கி கடன் மோசடி வழக்கு: அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
வங்கி கடன் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கு: தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
3. மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கு; தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் கைது
மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக சந்தேகத்தின் பேரில் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு
வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. மாட்டுக்கறி சாப்பிட்ட வாலிபரை தாக்கிய வழக்கு: மேலும் பலருக்கு போலீசார் வலைவீச்சு
மாட்டுக்கறி சாப்பிட்ட வாலிபரை தாக்கிய வழக்கில் மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.