மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலி: ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீர் ‘மவுசு’ + "||" + The use of plastic products is banned echo: the sudden 'masculine'

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலி: ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீர் ‘மவுசு’

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலி: ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீர் ‘மவுசு’
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலியால் ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது.
லாலாபேட்டை,

ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், கப்புகள், பைகள் ஆகியவற்றால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு, ஜனவரி 1-ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பயன்படுத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால், பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி வந்த ஓட்டல்கள், சாலையோர டிபன் கடை உரிமையாளர்கள் வாழை இலையில் உணவு பரிமாறி வருகின்றனர். தற்போது வாழை இலையின் விலை கூடி உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள்.

வாழை இலை அதிக விலைக்கு விற்பதால் அதனை வாங்க முடியாத சிறு வியாபாரிகள் ஆற்றங்கரையோர பகுதிகளில் வளரும் சேம இலையை நாடி வருகின்றனர். இதனால், சேம இலைக்கு திடீரென மவுசு கூடியுள்ளது. ஆற்றங்கரையோரம் மற்றும் வயல்வெளி பகுதிகளில் வளரும் இந்த இலையை முன்பெல்லாம் அதிகம் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். தற்போது லாலாபேட்டை பகுதியில் இறைச்சிக்கடை, கருவாடு கடைகளில் இந்த இலையை அதிகளவு கேட்பதால் இதனை பறிக்கும் பணியில் இப்பகுதி பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது
நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையை நீக்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்தாப் ஆலத்துக்கு ஒரு ஆண்டு தடை
வேகப்பந்து வீச்சாளர் அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு முன்னதாக சவுதம்டனில் உள்ள ஓட்டலில் தங்கி இருக்கையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.
3. குளித்தலை பகுதி கடைகளில் அதிரடி சோதனை: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. ஆகஸ்டு மாதம் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு
ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
5. பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருளாகும் பருத்தி
பிளாஸ்டிக்கின் தீமை பற்றி உலகம் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமலுக்கு வந்துள்ளது. நெகிழா தன்மை கொண்ட பிளாஸ்டிக் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல.