மாவட்ட செய்திகள்

“சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு + "||" + "Pinarayi Vijayan is acting to spoil the sanctity of Sabarimala" H. Raja's charge

“சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு

“சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு
“சபரி மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” என எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
திருச்சி,

இடதுசாரி சிந்தனையும், நாத்திக சிந்தனைகளும் இந்த நாட்டின் அறிவு களஞ்சியங்களை அழித்திருக்கின்றன. இந்த நாத்திக, கம்யூனிச, தீய சக்திகள் தான் கொஞ்சம், கொஞ்சமாக இந்து கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்று தீய நோக்கத்தோடு செயல்படுகின்றன.

மதமாற்றம், தீய சக்திகளின் பிரதிநிதியாக இருக்கின்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மோசடியாக சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நாத்திகர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள் அய்யப்பன் கோவிலை ஒரு ‘ரிசார்ட்’ ஆக நடத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

பிரவம் தேவாலயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தவில்லை. பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு உள்ளது, ஆனால் அதனை எடுக்கவில்லை. தீய நோக்கத்தோடு இந்து மதத்தை அழிப்பதற்காக மதமாற்ற தீய சக்திகளோடு சேர்ந்து செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்திலும் இந்து புனித தலங்கள், கோவில்கள் இருக்கிற இடத்தில் மாற்று மதத்தினர் தீயநோக்கத்தோடு அதனை ஆக்கிரமிக்கின்றனர். இதேபோல கேரளாவில் கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளிடம் சபரிமலையை ஒப்படைப்பதற்காக ஒரு தீய நோக்கத்தோடு செயல்படுகிற பினராயி விஜயனின் செயலை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க.வின் இந்த போராட்டம் தொடரும்.

பள்ளிவாசல்களில் பெண்கள் செல்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. காரணம் மதம் சார்ந்ததில் மதங்கள் முடிவு செய்துகொள்ளும், நீதிமன்றம் அல்ல. இதனை மக்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “தேர்தல் ஆணையம் தன்னாட்சி உரிமம் பெற்றது. அதனை அவர்கள் கவனிப்பார்கள்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது; மேலவையில் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
நாட்டின் குற்ற தலைநகராக டெல்லி உருவாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் மேலவையில் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2. பதவி ஏற்கும்போது ‘தமிழ் வாழ்க’ என கோஷம்: ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட தமிழக எம்.பி.க்களின் இரட்டை வேடம் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்போது ‘தமிழ் வாழ்க’ என கோஷமிட்ட தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு இரட்டை வேடம் போட்டு உள்ளனர் என்று அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டி உள்ளார்.
3. நடிகர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் விஷால் குற்றச்சாட்டு
நடிகர் சங்க தேர்தலில், எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் என விஷால் குற்றம் சாட்டினார்.
4. 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது நல்லக்கண்ணு குற்றச்சாட்டு
8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என்று நல்லக்கண்ணு கூறினார்.
5. தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய- மாநில அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...